ISIS தலைவர் அல்-பாக்தாதியின் விதவைக்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிமன்றம்

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் முதல் மனைவிக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

உம்மு {ஹதைபா என்று அறியப்படும் அஸ்மா முஹமது என்ற அந்தப் பெண் ஐ.எஸ். உடன் இணைந்து பணியாற்றியது மற்றும் யாசிதி பெண்களை தடுத்து வைத்திருந்ததாக கார்க் குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றங்காணப்பட்டதாக உச்ச நீதிச் சபை தெரிவித்துள்ளது.

பக்தாதியின் பல மனைவிகளில் ஒருவரான உம்மு {ஹதைபா துருக்கியில் பொய்யான அடையாளத்துடன் தங்கியிருந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இந்த ஆண்டு பெப்ரவரியில் ஈராக்கிற்கு நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.