புதிய இணைப்பு
உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (iran) அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ibrahim Raisi) உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. .
அத்துடன் இப்ராஹிம் ரைசியுடன் (Ibrahim Raisi) பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
கடினமான வானிலையிலும் ஒரு மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு மீட்புப் படையினர் விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்து உடல்களை மீட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ibrahim Raisi) மற்றும் வெளியுறவு அமைச்சரும் உயிரிழந்துள்ளதாக அரச செய்தி நிறுவனமான MEHR தெரிவித்துள்ளது.
அஸர்பஜான் எல்லைப்பகுதியில் நேற்று (19.5.2024) ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் ஈரான் அதிபர் வெளியுறவு அமைச்சர் அவர்களுடன் பயணித்த ஏனைய ஐந்து பேரும் வீரமரணம் அடைந்ததாக குறித்த செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
அத்துடன் அரச ஊடகமானது உயிரிழந்தவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.
அயதுல்லா செய்யத் இப்ராஹிம் ரைஸ் அல் சதாதி, அயதுல்லாஹ் செய்யத் முஹம்மது அலி அல்-ஹாஷிம், வைத்தியர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், வைத்தியர் மாலிக் ரஹ்மதி, சர்தார் செயத் மெஹ்தி மௌசவி அன்சார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக இரான் அதிபர் ரைசி (Ibrahim Raisi) சென்ற உலங்கு வானூர்தியை தேடுவதற்கு உதவ துருக்கி அனுப்பிய ஆளில்லா விமானம் ஒன்று முக்கிய தடயம் ஒன்றை கண்டுபிடித்தது.
அடுத்தபடியாக அதிபர் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்ட வெளியான நிலையில், தற்போது இரான் அதிபர் ரைசி உயிரிழந்ததை அந்நாட்டின் அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.