சூரியக் குளியலில் ஈடுபடும் போ ட்ரம்பை கொல்ல ஈரான் சதி - பரபரப்பு தகவல்



அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அவரது வீட்டில் சூரியக் குளியலில் ஈடுபடும் போது, ட்ரோன் தாக்குதலின் மூலம் கொல்லப்படலாம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ஈரானின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி (Javad Larijani) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
 
இந்த விடயம் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர், அமெரிக்காவின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது.
 
இந்தப் போரின் போது, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
 
இது ஜீரணிக்க முடியாத விடயமாக மாறியுள்ளது.
 
எனவே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிராக, ஈரான் தலைவர்கள் வெளிப்படையான மிரட்டல்களையும், கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில், ஈரான் நாட்டு  மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி (Javad Larijani), அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அவரது வீட்டில் சூரியக் குளியலில் ஈடுபடும் போது, ட்ரோன் தாக்குதலின் மூலம் கொல்லப்படலாம் என தெரிவித்துள்ள விடயம், தற்போது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது