ஹமாஸ் அமைப்புக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை களைய வேண்டும் இல்லையென்றால், அமெரிக்கா அவர்களின் ஆயுதங்களை களையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்

அது விரைவாகவும், ஒருவேளை வன்முறை வழியாகவும் நடக்கும் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தாம் பிடித்து வைத்திருந்தவர்களில், மரணமான, மேலும் நான்கு இஸ்ரேலியர்களின் உடலங்களை ஹமாஸ் அமைப்பு கையளித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

பணயக்கைதிகளின் எச்சங்களை கண்டுபிடிப்பதில் சிரமம்

செஞ்சிலுவைச் சங்கம், சவப்பெட்டிகளில் வைக்கப்பட்ட இந்த உடலங்களை மீட்டு, நேற்று இரவு இஸ்ரேலிய இராணுவத்திடம் ஒப்படைத்தது.

எந்தவொரு தாமதம் அல்லது வேண்டுமென்றே தவிர்ப்பது ஒப்பந்தத்தின் மொத்த மீறலாகக் கருதப்படும்,

எனவே அதற்கேற்ப பதிலளிக்கப்படும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் பாலஸ்தீன ஹமாஸை எச்சரித்த நிலையிலேயே, மேலும் நான்கு இஸ்ரேலியர்களின் உடலங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இறந்த பணயக்கைதிகளின் எச்சங்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுவதன் காரணமாகவே, அவர்களின் உடலங்களை ஒப்படைப்பதில் தாமதத்தை ஏற்படுத்துவதாக ஹமாஸ் கூறுகிறது.

முன்னதாக, தடுப்பில் மரணமான, 45 பாலஸ்தீனியர்களின் உடலங்கள் நேற்று, இஸ்ரேலில் இருந்து, காசாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.