இஸ்ரேல் (Israel) மீது நேற்றிரவு சுமார் 400 ஏவுகணைகளை வீசி ஈரான் (Iran) அதிரடியான பதிலடித் தாக்குதலில் இஸ்ரேலின் பல முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளதாகவும் சுமார் 180 ஏவுகணைகள் ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பின் விளைவுகள் இருக்கும் என இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.
எனினும் தம்மால் ஏவப்பட்ட 90% ஏவுகணைகள் இலக்குகளை சரியாக தாக்கியிருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் மற்றொரு தாக்குதல் நடைபெறும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.
லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை மாதம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கும், பாலத்தீன, லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இஸ்ரேலில் உள்ள இலங்கை (srilanka) பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமால் பண்டார விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
தேவையற்ற பயணங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுங்களுமாறும், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் PIBA வழங்கும் வழிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், அத்தியாவசிய உணவு, மருந்து, தண்ணீர் ஆகியவற்றை அருகில் வைத்துக் கொள்ளுமாறும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
🚨 DOZENS OF IMPACT BY IRANIAN MISSILES AT ISRAELI TARGETS pic.twitter.com/yvpq2HpaZY
— Iran Observer (@IranObserver0) October 1, 2024