டவுனிங் ஸ்ட்ரீட் முடக்கநிலை விருந்துகள் மீதான விசாரணை-சந்தேக நபர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் பொலிஸ்!

டவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் வைட்ஹாலில் உள்ள முடக்கநிலை விருந்துகள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக பெருநகர பொலிஸ்துறை 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும்.மே 2020ம் ஆண்டு மற்றும் ஏப்ரல் 2021ம் ஆண்டுக்கு இடையில் எட்டு திகதிகளில் நிகழ்வுகளில் பங்கேற்றதாகக் கூறப்படும் நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும்.இதன் உண்மை நிலைக் குறித்து அவர்களிடம் கேள்வி தொடுக்கப்படும். மேலும் உண்மையாக பதிலளிக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தப்படும்.மின்னஞ்சல் அனுப்பப்பட்டவர்களில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் அவரது மனைவி கேரியும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மின்னஞ்சலுக்கு ஏழு நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று பெருநகர பொலிஸ்துறை கூறியது. ஆனால் தொடர்பு கொண்டால் எப்போதும் அபராதம் விதிக்கப்படும் என்று அர்த்தம் இல்லை.‘ஆபரேஷன் ஹில்மேன்’என்று அழைக்கப்படும் பெருநகர பொலிஸ்துறை விசாரணை, தொற்றுநோய்களின் போது எட்டு திகதிகளில் 12 கூட்டங்களை ஆய்வு செய்கிறது. அவற்றில் சில பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வுகளும் அடங்கும்.