அனைத்துலகப் படைகளும் வடக்கு - கிழக்கில் தரையிறங்க வாய்ப்பு - அருட்தந்தை எச்சரிக்கை


வடக்கு - கிழக்கில் இந்தியப் படைகள் மட்டுமன்றி அனைத்துலகப் படைகளும் தரையிறங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்

 இன்று குஜராத்தி வடக்கு இந்திய மார்வாடிகளின் பொருளாதார அட்டூழியம் மற்றும் மேலாதிக்கங்கள் தமிழகத்தில் விரிந்து வருகின்றது.

இந்த சூழலை பார்க்கும் போது அதற்கு எதிரான ஒரு கலகம் என்றாவது ஒருநாள் வரத்தான் போகின்றது. அப்படி வரும் போது முள்ளிவாய்க்காலில் நடந்தது போன்ற கொடூரம் தமிழகத்தில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இதேபோன்று இரண்டாம் உலக போரிற்கு பிறகு ஐரோப்பிய நிலப்பரப்பில் இனி அமைதி தான், சண்டை இல்லை என்று எல்லோரும் நம்பி இருந்தோம். ஆனால் 21ஆம் நூற்றாண்டில் உக்ரைன் போர் எல்லாவற்றையும் தவிடுபொடி ஆகிவிட்டது.

அதேபோன்று தான் வடக்கு - கிழக்கில் மீண்டும் ஒருமுறை இந்தியப் படைகள் மட்டுமன்றி அனைத்துலகப் படைகளும் தரையிறங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

எனவே எது வேண்டுமானாலும் புவிசார் அரசியலில் நடக்கலாம். நடக்காது என சொல்வதற்கு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.