இலங்கை விவகாரங்களில் யாரும் தலையிடக் கூடாது - எச்சரிக்கும் ரஷ்யா

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்ன கொடவை கறுப்பு பட்டியலில் இணைப்பது தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ரஷ்யா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள.

நேற்று முன்தினம் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய லிவன் ஜகார்யன் இலங்கை உட்பட இறையாண்மை கொண்ட நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகள் தமது சொந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து நாங்கள் பேசுகிறோம். அவர்களுக்கு இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன.

இருந்த போதிலும் இலங்கை உள்ளிட்ட இறையாண்மை கொண்ட நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பது உங்களது(இலங்கை) விருப்பம். இதில் யாரும் தலையிட முடியாது. இது உங்களுக்குள் இருக்கும் பிரச்சினை“ - என்று தெரிவித்தார்