20 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவ உள்ளதாக தகவல்

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை(புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில், 20 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிதாவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிரணியில் இருந்து ஒரு குழு ஆளுங்கட்சி பக்கம் தாவவுள்ளது. அத்துடன், ஆளுங்கட்சி பக்கம் உள்ள ஒரு குழு எதிரணியில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, கபீர் ஹாசிம், மயந்த திஸாநாயக்க, அலவத்துவல, அஜித் மன்னப்பெரும மற்றும் கிங்ஸ் நெல்சன் ஆகியோர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோன்று ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமன, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, டிலான் பெரேரா, திலக் ராஜபக்ச, உபுல் கலப்பட்டி, சரத் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகியோர் எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.