வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு விசாரணை பிரிவால் கைதுசெய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போராளி எனப்படுபவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து வருகைதந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு வவுனியா மாவட்ட குற்றத்தடுப்புவிசாரணை பிரிவு பொலிசாரும் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம்பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது நேரியகுளத்தில் வீடு ஒன்றின்அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள்
86 கைக்குண்டுகள் ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம்ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.
இதனை அடிப்படையாகக் கொண்டு அந்தவீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்படவு
இதேநேரம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்று முன்தினம் (21) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.
கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்தர்.
அவரிடமிருந்து டி-56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் அவர் இந்தத் துப்பாக்கியைத் தம்சவம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து, தங்களிடமிருந்து தகவல் வரும்வரை ஹோட்டல் அறையில் தங்கியிருக்குமாறு கூறிச் சென்றுள்ளனர்.
இதற்கிடையில், பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது