இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-02 பேர் பலி 20 பேர் காயம்!

இந்தோனேசியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 20 பேர் காயமடைந்துள்ளதாக, தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்தோனேசியா 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் அங்குள்ள பாடசாலைகள், வங்கி உள்ளிட்ட சில கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு பிராந்தியங்களான பசமன் மற்றும் மேற்கு பாசமான் ரீஜென்சிகளுக்கு மீட்புக்குழுவினர் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தலைவர் சுஹரியாண்டோ ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.இந்த நிலநடுக்கம் சுமத்ரா தீவின் வடக்கே 12 கிமீ ஆழத்தில், மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள புக்கிட்டிங்கி நகரில் இருந்து 70 கிமீ தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை, ஆனால் அண்டை மாகாணங்களான ரியாவ் மற்றும் வடக்கு சுமத்ராவிலும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.