ரஷ்யா - உக்ரேன் யுத்த களத்தில் போரிட கட்டாயப்படுத்தப்படும் இந்தியர்கள் : அதிர்ச்சி தகவல்

 ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரில் போரிட இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

 ரஷ்ய ராணுவம் சார்பில் ‘ராணுவ உதவியாளர்கள்’ என பணியமர்த்தப்பட்ட இந்தியர்கள் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போரிட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி உள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பெப்ரவரியில் தொடங்கியது. இதில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள், உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையில் அங்கம் வகித்து வருகின்றனர்.

 இந்நிலையில், ரஷ்ய தரப்பில் இந்தியர்கள் சிலர் எல்லையில் போரிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் உத்தர பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்

ஆயுதம் மற்றும் வெடிமருந்து பயன்பாடு குறித்த அடிப்படை பயிற்சியை ரஷ்ய ராணுவம் தங்களுக்கு வழங்கி, உக்ரைன் நாட்டை அண்மித்து எல்லைப்பகுதியான ரோஸ்டோவ்-ஒன்-டொன் சுழளவழஎ-ழn-னுழn பகுதியில் உள்ள முகாமில் கடந்த ஜனவரி மாதம் முதல் பணிக்கு அமர்த்தி உள்ளதாக பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

2023 நவம்பரில் ரஷ்யா சென்ற இந்தியர்கள் ராணுவ உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாதம் இந்திய மதிப்பில் .1.95 லட்சம் ரூபா சம்பளம்   மற்றும்  .50,000 ரூபா மேலதிக கொடுப்பனவு  என அவர்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இருந்தும் முதல் இரண்டு மாதத்துக்கான ரூ.50,000 மேலதிக கொடுப்பனவு மட்டும் அவர்கள் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

 குறிப்பாக “இந்தியர்கள் மட்டுமல்லாது ஏனைய நாடுகளை சேர்ந்தவர்களும் எல்லையில் போரிட வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களது கடவுச் சீட்டுக்கள்; பறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அவர்கள் உயிர் அச்சுறுத்தலில் உள்ளது. ராணுவ உதவியாளர்கள் என சொல்லி ரஷ்ய படையினர் இவ்வாறு செய்துள்ளனர்” என தகவல்கள் தெரிவிக்கின்றன.