இலங்கைக்கு1500 பயிற்சி இடங்களை ஒதுக்கும் இந்திய பாதுகாப்புப் படை..!


இந்திய பாதுகாப்புப் படைகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 பயிற்சி இடங்களை இலங்கைக்கு வழங்குகின்றன.

அவற்றுக்கு ஆண்டுதோறும் 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியுடன் சிறப்புத் திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்படுவதாக இந்திய துணை உயர் ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் வலிமையான மற்றும் நீடித்த பயிற்சியே இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புக்கு வருகைத்தந்த இந்திய கடற்படை கப்பலான சுகன்யாவில் பயிற்சி பெற்ற இலங்கை பாதுகாப்பு படை வீரர்களிடம் உரையாற்றும் போது அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.