இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து விபத்து-இரு விமானிகளும் பலி!

ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியுள்ளது.விமானத்தில் தீப்பிடித்ததால் அதில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளனர்.சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் விமானம் முற்றிலும் எரிந்து கருகிய நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதனிடையே மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்திரியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விபத்தைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்துள்ளார்.