இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியா ரஷ்யாவை சார்த்திருக்கக்கூடாது-அமெரிக்கா!

இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியா, ரஷ்யாவை சார்த்திருக்கக்கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.இது குறித்து அமெரிக்க இராணுவ அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி மேலும் தெரிவிக்கையில், ”இந்தியா உள்ளிட்ட எந்த நாடுகளாக இருந்தாலும், தங்கள் இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யாவை சார்த்திருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவை பிற நாடுகள் சார்ந்து இருப்பதை நாங்கள் என்றும் ஊக்கப்படுத்த மாட்டோம்.  அதே நேரத்தில் இந்தியா உடனான எங்கள் உறவுகளை மிகவும் மதிக்கிறோம்.  இந்த உறவுகளை மேம்படுத்த தேவையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.