ஒரேநேரத்தில் சந்தித்துக்குகொண்ட அமெரிக்காவின் முக்கிய புள்ளிகள் : வைரல் புகைப்படம்


கடந்த மாத இறுதியில் தனது 100 ஆவது வயதில் உயிரிழந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் இறுதிச் சடங்கில் தற்போதைய, முன்னாள் ஜனாதிபதிகள் 5 பேர் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டமை தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இறுதிச் சடங்கானது வியாழக்கிழமை (09) வொஷிங்டன் நேஷனல் கதீட்ரலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜோ பைடன், டெனால்ட் ட்ரம்ப், பராக் ஒபாமா, ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோர்  கலந்து கொண்டு, முதல் வரிசையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.

 
கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சித் தலைவர் ட்ரம்பிடம் தோல்வியடைந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் அவரது முன்னோடிகளான மைக் பென்ஸ் மற்றும் அல் கோர் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளும் இறுதி சடங்கில் கலந்து கொண்டு கார்டருக்கு மரியாதை செலுத்தினர்.

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் டரம்பிடம் தோல்வியடைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அவரது கணவருடன் சடங்கில் பங்கெடுத்தார்.

ஜனாதிபதி ஜோ பைடன் தனது புகழஞ்சலியில், கார்டரின் பண்பு மற்றும் தலைமைத்துவத்தை பலமுறை பாராட்டினார்.
 
ஒரு தசாப்தத்தில் அரசியல் ரீதியாக மோதலில் ஈடுபட்டுள்ள ட்ரம்ப் மற்றும் ஒபாமா – இறுதி சடங்கு நிகழ்வானது தொடங்குவதற்கு முன்பு சிரித்து அரட்டையடிப்பதை காட்டும் புகைப்படங்களும் இதன்போது படம்பிடிக்கப்பட்டிருந்தன