2020 ஆம் ஆண்டு எல்லை மோதலால் ஏற்பட்ட நெருக்கடியான உறவுகளை சரிசெய்யும் முயற்சியில், நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கும், விசாக்களை எளிதாக்கவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கவும் இந்தியாவும் சீனாவும் இணங்கியுள்ளன.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனான எல்லைப் பேச்சுவார்த்தைகளுக்காக புதுடெல்லிக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தையில் துருப்புக்கள் நிலைநிறுத்தம், எல்லைகளை நிர்ணயித்தல் மற்றும் எல்லை முகாமைத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. இருப்பினும் எந்த முன்னேற்றமும் அடையப்படவில்லை.

2026 ஆம் ஆண்டில் சீனாவில் மீண்டும் சந்திக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக பெய்ஜிங் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலையான, கணிக்கக்கூடிய, ஆக்கபூர்வமான உறவுகள் பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாங் யி ஐ சந்தித்த பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த மாத இறுதியில் மோடி சீனாவுக்குச் செல்ல உள்ளார்.
இதேவேளை, சீன - இந்திய உறவுகளின் நிலையான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சி இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களில் உள்ளது என்றும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் விரிவாக்கப்பட்ட ஒத்துழைப்பை வலியுறுத்துவதாகவும் வாங் யி, அஜித் டோவலிடம் தெரிவித்ததாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், திபெத்தில் உள்ள யார்லுங் சாங்போ நதியின் மீது சீனா நிர்மாணிக்கும் பெரிய அணை குறித்து இந்தியா கவலைகளை எழுப்பியது. இந்த நதி இந்தியாவிலும் பங்களாதேஸிலும் பிரம்மபுத்ரா என அழைக்கப்படுகிறது.
இந்தநிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் குறித்த விடயத்தில் மிகவும் வெளிப்படைத்தன்மை தேவை என வலியுறுத்தியுள்ளடன் மேலும் கீழ்நோக்கி உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் அவதானம் செலுத்தவேண்டியதன் அவசியம் குறித்து விவரித்துள்ளார்.
எவ்வாறாயினும், திபெத்தில் உள்ள அதன் நீர்மின் திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது எனவும் நீர் ஓட்டத்தை குறைக்காது என்றும் சீனா இதன்போது தெளிவுபடுத்தியுள்ளமையும் குறி