பணக்காரர்களின் நிறுவனமே ஐ.எம்.எவ். -வாசுதேவ காட்டம்


சர்வதேச நாணய நிதியம் என்பது பணக்காரர்களின் அதிகாரத்தை உறுதி செய்யும் நிறுவனம் ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கை போன்ற நாடுகளின் பிரச்சினைகளில் தலையிட்டு பணக்காரர்களுக்கு தேவையான வளங்களை எமது நாட்டில் இருந்து உறிஞ் சுவதற்கு அவர்கள் நிபந்தனைகளை விதிக்கின்றார்கள். அதே போன்று பிரச்சினையின் சுமையை மக்கள் மீது சுமத்துகிறார்கள். அந்த சட்டத்தை மூடுவதற்காக உயர் வகுப்பாரிடமிருந்தும் வரியை அறவிடுகிறார்கள். உயர்வகுப்பார் வரி செலுத்துவதை தவிர்க்கிறார்கள்.

மத்திய வங்கி ஆளுநர் கஷ்டமான வேதனையான முடிவுளை நோக்கி செல்ல வேண்டும் என கூறுகின்றார். எமது நாட்டின் கடன் உரிமையா ளர்களின் ஒப்புதலை பெற்று கடனை செலுத்தும் விதம் குறித்து அமைப்பொன்றை உருவாக்கி கடன் செலுத்தல் தொடர்பாக கலந்துரையாட வேண்டியுள்ளது.

பொருளாதார பிரச்சினையிலிருந்து மீளும் விதம் குறித்து கடன் உரிமையாளர்களுக்கு கூற வேண்டும். அரசுக்கு சொந்தமான சொத்துக்களில் அதிக வரு மானத்தை பெறும் விதம் குறித்து சுட்டிக்காட்ட வேண்டும்.

ஊழியர்களை முகாமைத்துவத்திற்குள் இணைத்துக் கொள்ள வேண்டும். சுங்க, வருமான வரி,கலால் வரித் திணைக்களங்களை நவீன மாற்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அரச வருமா னத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.