ரஸ்யாவின் முன்னாள் இராணுவ அதிகாரி இகோர் கேர்கின் கைது

ரஸ்யாவின் முன்னாள் இராணுவ அதிகாரி இகோர் கேர்கின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இகோர் கேர்கின் ரஸ்ய ஜனாதிபதியை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில் தீவிரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இகோர் கேர்கின் புட்டினின் மனைவி சமூக ஊடக பதிவில், “தனது கணவனை காணவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் “தான் வீட்டிற்கு வந்தவேளை அவரை காணவில்லை எனவும், தனது கணவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் வெளியான பின்னர் கேர்கின் ரஸ்ய நீதிமன்றமொன்றில் அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படும் படம் வெளியாகியுள்ளது.

அவருக்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும், இவர் 2014இல் உக்ரைன் வான்பரப்பிற்கு மேலாக மலேசியன் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமைக்கு காரணமானவர் என சர்வதேச நீதிமன்றத்தினால் குற்றம்சாட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.