காசாவில் தவறுதலாக பிணைக்கைதிகளை கொன்ற இஸ்ரேல் இராணுவம்


காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மூன்று இஸ்ரேலியர்கள் தவறாக அடையாளம் காணப்பட்டதால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவ பேச்சார் டேனியல் வெள்ளிக்கிழமை(15)ஹகாரி தெரிவித்தார்.

28, 22 மற்றும் 26 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஹைம் க்ஃபார் அஸாவில் இருந்து கடத்தப்பட்ட யோதம் ஹைம், நிர் ஆமில் இருந்து கடத்தப்பட்ட சமர் தலால்கா மற்றும் ஒக்டோபர் 7 ஆம் திகதி கடத்தப்பட்ட அலோன் ஷம்ரிஸ் ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர்.

காசாவின் வடக்கே ஷெஜாயா என்ற இடத்தில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய நடவடிக்கையின் போது மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.