வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க அனுமதியேன் - ரணில் அதிரடி

வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க அனுமதியேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் காணிகள் அவர்களுக்கே சொந்தம் எவரும் ஆக்கிரமித்து வைக்கவோ அவற்றை எவரும் சுவீகரிக்கவோ நான் இடமளிக்க மாட்டேன் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் அனுமதியின்றி சுவீகரிக்கப்பட்டு இன்னமும் விடுவிக்காமல் இருக்கும் காணிகளை படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.