சினிமாவில் நம்பர் 1, நம்பர் 2 என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை!

தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே.நடிக்க துவங்கிய காலகட்டத்தில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த இவர், தற்போது விஜய், பிரபாஸ் என முன்னணி நட்சத்திரங்களுடன் பிசியாக நடித்து வருகிறார். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இது இவருக்கு இரண்டாவது தமிழ் திரைப்படம். இந்த நிலையில் பூஜாஹெக்டே அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் நம்பர் 1, நம்பர் 2 என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது படங்களில் வெற்றியை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். அதன் காரணமாக நான் ஒருபோதும் நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்று திட்டமிடுவது இல்லை