நான் மோடியின் ஆதரவாளர்-சமந்தா!

நான் மோடியின் ஆதரவாளர் என சமந்தா பேசியிருக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமந்தா தற்போது ‘யசோதா’, ‘சகுந்தலம்’ என இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 67’ படத்திலும் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரபாபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

‘தி ஃபேமிலி மேன் 2’, ‘புஷ்பா’ பட ஊ சொல்றியா பாடல் ஆகியவற்றின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியிருக்கிறார். நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பிறகு அவரைப் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன.அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவர் பேசியுள்ள பழைய விடியோக்கள் தற்போது டிரெண்டிங்கில் உள்ளன. ஒரு விடியோவில் சமந்தா பேசியிருப்பதாவது, நான் எப்பொழுதும் மோடிஜியின் ஆதரவாளர். அவரது செயல்பாடுகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பேசியிருக்கிறார்.

மற்றொரு விடியோவில் சமந்தா, நான் மோடி ஆதரவாளர். மோடியின் தலைமையில் நாடு பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. அவர் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.நரேந்திர மோடி ஆதரவாளர் என சமந்தா பேசியிருப்பதனால் ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகவும், அவரை விமர்சித்தும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.