தனது உடல்நிலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தாம் நலமாக இருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பிரதமர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.எனினும் இந்தக் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பிரதமர் காலமானார் என்றும் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பரவி வரும் செய்திகள் பொய்யானவை என நாமல் ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            