இஸ்ரேலை கண்டித்து கொழும்பில் பிரமாண்ட பேரணி ..!

பலஸ்­தீனில் இடம்­பெறும் இஸ்­ரேலின் இன அழிப்பை கண்­டித்தும் சுதந்­திர பலஸ்தீன் இராச்­சியம் ஒன்றை பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு சர்­வ­தே­சத்­துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கொழும்பில் இன்று மாலை பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 பலஸ்­தீ­னுக்­காக ஒன்­றி­ணையும் இலங்­கை­யர்கள் அமைப்­பினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இஸ்ரேல் எந்த சர்­வ­தேச சட்­டத்­தையும் மதிக்­காமல் அங்கு இனப்­ப­டு­கொலை செய்­து­வ­ரு­கி­றது. இது­வரை 18ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட குழந்­தைகள் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். உலகில் எவ­ருக்கு அநீதி ஏற்­பட்­டாலும் அதற்­காக நாங்கள் எங்­களால் முடிந்த வகையில் அதற்கு எதி­ராக குரல்­கொ­டுக்க வேண்டும். அதுதான் மனி­தா­பி­மா­ன­மாகும். பலஸ்­தீனில் யுத்தம் இடம்­பெ­று­வ­தில்லை. அங்கு பாரிய அநி­யா­யமே இடம்­பெ­று­கி­றது. உலகில் மனித படு­கொ­லைகள் இடம்­பெ­று­வதை நேரடி ஒளி­ப­ரப்பு செய்­யப்­ப­டு­வது இதுவே முதல்­த­ட­வை­யாகும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.