தமிழகத்திலிருந்து யாழிற்கு கடத்திவரப்பட்ட பெருமளவான பொதிகள்!


இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 180 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கைப் படகில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவே யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் இன்று கடற்படையால் கடலில் வைத்து கைப்பற்றப்பட்டது. 

கஞ்சாவை எடுத்து வந்த நபர் படகுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதனையடுத்து, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கஞ்சாவை கடத்தி வந்த நபரையும் கடற்படையினர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதோடு,  சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.