கிரிமியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இணைப்பு பாலத்தில் பாரிய தீ விபத்து


ரஷ்யாவையும் கிரிமியா தீபகற்பத்தையும் இணைக்கும் பாலத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2014 இல் கிரிமியாவை ரஷ்யா  உக்ரைனிலிருந்து கைப்பற்றியது. இப் பாலம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி விளாடிமிர் புடினால் இப்பாலம் திறக்கப்பட்டது.

அத்துடன் இந்த இணைப்புக்கு ஒரே வழியாக அமைந்துள்ள கெர்ச் பாலத்தின் ஊடாகவே உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை ரஷ்யா நகர்த்தி வருகிறது.

இந்நிலையில் பாலத்தில் ஏற்பட்ட தீயினால், போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்தநிலையில் ரஷ்ய தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன் படைகளுக்கு இது முக்கிய இலக்காக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அத்துடன் இது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகர் ருவிட்டர் செய்தி ஒன்றையும்  வெளியிட்டுள்ளார். அதில் இந்த சம்பவம் "ஆரம்பம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வெடிப்புக்கு உக்ரைனிய படைகள் தான் காரணம் என்று அவர் குறிப்பிடவில்லை.