யாழ்ப்பாணம் – கொடிகாமம் ஏ9 வீதியில் கோர விபத்து!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் ஏ9 வீதியில் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமம் பகுதியில் இன்று மதியம் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ். நோக்கி பயணித்த ஹயஸ் வாகனமும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் சிக்கி காயமடைந்த பலர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.