அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை-50 ஆண்டுகால உத்தரவை மாற்றிய உயர்நீதிமன்றம்!

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்தநாட்டு உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது.இதன்மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி தீர்மானிக்க இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது.அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் வழக்கில், கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று வெளியான உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சட்டங்களை 13 மாகாணங்கள் இயற்றியுள்ளதாகவும், ஏனைய சில புதிய கட்டுப்பாடுகளை விரைவாக நிறைவேற்ற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.இந்நிலையில், கருத்தரிக்கும் வயதுடைய சுமார் 36 மில்லியன் பெண்கள், கருக்கலைப்புக்காக செல்ல முடியாத நிலையை இது ஏற்படுத்தும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.