இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா : தடுமாறிய இஸ்ரேல் இராணுவம்

 
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் மூன்று பிராந்தியங்களில் ஒன்றிற்கு தலைமை ஏற்ற முகமது நாமேஹ் நாசர் இஸ்ரேல் தாக்குதலால் நேற்று கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் உள்ள பல இராணுவ தளங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது.
 
இந்த தாக்குதல் இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத அளிவிற்கு நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கருதப்படுகிறது.
இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்த ஏராளமான ஏவுகணைகள் மற்றும் வான்வழி இலக்குகளை இடைமறித்து அழித்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதா? என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

கடுமையான வெடிபொருட்கள் நிரப்பிய கட்யுஷா ரொக்கெட்டுகள், ஃபலாக் ரொக்கெட்டுகள் மூலம் லெபனான் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் பல்வேறு தளங்களை குறிவைத்து வெடிக்கும் டிரோன்களையும் செலுத்தியுள்ளது.  

லெபனான் ஹிஸ்புல்லா- இஸ்ரேல் ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இரு பக்க எல்லைகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
வடக்கு இஸ்ரேலில் 16 வீரர்கள், 11 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். லெபனானில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகமானோர் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.