கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதார வரி!

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதார வரி விதிக்க கனேடிய மாகாணமான கியூபெக் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கனடாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொடர்பான இறப்புகளைக் கண்ட கியூபெக்கில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் நாட்டிலேயே தடுப்பூசி போடாதவர்களுக்கு அபராதம் விதிப்பது என்பது இதுவே முதல்முறை என முதல்வர் அறிவித்தார்.கியூபெக்கில் சுமார் 12.8% மட்டுமே தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் 85% க்கும் அதிகமானோர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் தரவுகள் காட்டுகின்றன.எனவே முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என முதல்வர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.