என்னது அதற்குள் லியோ படத்தின் சூட்டிங் முடிஞ்சுதா? - உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் லியோவும் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோவின் ப்ரோமோ வெளியாகி சமூக ஊடகங்களில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது.

லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் த்ரிஷா. ஏற்கனவே குருவி, கில்லி, ஆதி, திருப்பாச்சி போன்ற படங்களில் விஜய்யுடன் நடித்த த்ரிஷா தற்போது 5-வது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். 14 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகர் விஜய்யின் மனைவியாக த்ரிஷா நடிப்பதாகக் கூறப்படுகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் காஷ் ஷெடியுல் மார்ச் 30 -ல் நிறைவு பெறவுள்ளதாகத் தகவல் ஒன்று வெளியாகவுள்ளது. மேலும் அடுத்த ஷெடியுல்  சென்னையில் நடக்கவுள்ளதாகவும், இந்த ஆண்டு மே மாதத்துக்குள் லியோ படத்தின் மொத்த ஷூட்டிங் நிறைவு பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.