ஹரிஷ் கல்யாண் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு

சிந்து சமவெளி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். இவர் பியர் பிரேமா காதல், தாரல பிரபு போன்ற பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது இயக்குனர் சசி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.இவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்கிறார்சித்தி இத்னானி ஏற்க்கனவே சிம்பு நடிக்கும் வெந்து தணிந்து காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன்                      போஸ்டர் வெளியாகியுள்ளது.இப்படத்துக்கு நூறு கோடி வானவில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி, சித்தார்த், ஜி.வி பிரகாஷ் ஆகியோர் தங்களது சமூக வலைத்தளத்தில் இந்த திரைப்படத்தில் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர்களை இன்று வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை மாதவ் மீடியா மற்றும் அருண் அருணாச்சலம் புரோட்டக்ஸன் இணைந்து தயாரித்துள்ளது.