பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்


மாவீரர் வார ஆரம்ப நாளான இன்று பண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த சிரமதான பணியில் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்து கொண்டிருந்தார்.

இந்த சிரமதான பணியில் ஆண்கள், பெண்கள் என அனைரும் இணைந்து உணர்வுபூர்வமாக சிரமதான பணியினை மேற்கொண்டனர்.

தொடர்ந்து இவ்வாரம் முழுவதும் இந்த துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் மாவீரர் நாளான நவம்பர் 27 அன்று உணர்வு பூர்வமாக மாவீரர் நாள் துயிலும் இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட உள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.