2022 இல் பிசியாக 9 படங்களில் நடிக்கிறார் ஹன்சிகா

ஹன்சிகா மோத்வானி தமிழ் படத்தில் நடித்து 2 வருடங்கள் ஆகிவிட்டதுஅவர் நடித்த மகா படம் இன்னும் வெளிவரவில்லை. பார்ட்னர், ரவுடி பேபி ,மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்டிஸ் ,ஹட்ஸ்டார், ஒரிஜினல்ஸ் மற்றும் வாலு பட இயக்குனர் விஜய் சாந்தனுடன் இணையும் ஒரு படமும் அடங்கும். இது குறித்து  ஹன்சிகா மோத்வானி கூறியிருப்பது கடந்த ஆண்டு அனைவருக்கும் சவாலாக இருந்தது. ஆனால் இந்த 2022 புத்தாண்டின் போது அனைவரின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பி யுள்ளது .எனது 9 படமும்  தயாரிப்பு நிலையில் வெவ்வேறு கட்டத்தில் உள்ளது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று கூறியுள்ளார்.