பொறளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு: கைதான மூவரில் ஒருவர் பிரதான சந்தேகநபராக அடையாளம்

கொழும்பு – பொறளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரில் ஒருவர் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரிடம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள பொரளை தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் நேற்று அறிவித்தனர்

அதன்படி, மாலை 4.45 மணியளவில் தேவாலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வலதுபுறம் உள்ள சிலைக்கு அருகில் குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதனையடுத்து, சந்தேகநபர்கள் தற்போது கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.