கோட்டாவிற்காக 400 மில்லியனை செலவிட்டது அரசாங்கம்?


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக அரசாங்கம் 400 மில்லியன் ரூபாவை செலவிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இடைக்கால வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்ற அறைக்கு வருகை தந்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக 4 ரூபாயினை கூட செலவிடவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்