இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள வரிச் சலுகை



இலங்கை மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதாரம் தற்போது மேம்பட்டுள்ள நிலையில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்துள்ளதாக சிறிலங்கா நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், வியாபாரிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதை போன்று சாதாரண மக்களுக்கும் வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் மக்களுக்கான வரிச் சலுகைகள் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்களுக்கு அதிகளவான நிவாரணங்களை வழங்க சிறிலங்கா அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் பல நடவடிக்கைகளை முன்னெடுக்குமெனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.