ஏமாற்றிவிட்டார் கோட்டாபய - தனி வழியில் செல்கிறோம் -வெளிவந்த பகிரங்க அறிவிப்பு

வியத்மகவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஏமாற்றி விட்டதாக அந்த அமைப்பின் தலைவர்,முன்னாள் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாக விரக்தியடைந்துள்ள தானும் மற்றும் உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உட்பட ஏனைய கட்சி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் புதிய அரசியல் பாதையில் பிரவேசிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.  

வியத்மக அமைப்பு ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவதற்கு கடுமையாக உழைத்தது குறிப்பிடத்தக்கது.