நாமலின் சொல்லை கேட்டதால் கவிழ்ந்தார் கோட்டாபய -அம்பலமாகும் தகவல்கள்


முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரின் ஆலோசனைக்கு அமைவாகவே செயற்பட்டதாகவும் குறைந்த பட்சம் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையை கூட ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

“கோட்டாபய ராஜபக்ச நாம் சொன்னபடி செயல்படுவார் என்று நினைத்துத்தான் அவரை நியமித்தோம்.முதல் சில மாதங்கள் நாங்கள் சொன்னபடியே செயல்பட்டார்.ஆனால் சில மாதங்கள் கழித்து அவர் நாங்கள் சொன்னதை கேட்கவில்லை. நாங்கள் சொன்னதை கேட்காததால் தான் இந்த சரிவை சந்திக்க வேண்டி ஏற்பட்டது.

குறைந்த பட்சம் மகிந்த ராஜபக்ச கூறியதை கூட கோட்டாபய ராஜபக்ச கருத்தில் கொள்ளவில்லை. தன் மீது தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் சொன்ன விஷயங்களை மட்டுமே அவர் கேட்டார்.

நாமல் ராஜபக்ஷ சொன்னபடி சென்றபோது இது நடந்தது.நாம் சொன்னபடி செயற்பட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. நாமல் ராஜபக்ச தனது பாவங்களை எல்லாம் செய்து எம்மை அடிக்கப் பார்க்கின்றார்.

நாமல் ராஜபக்ச, அனைத்து பாவங்களையும் கழுவ முடியாது, நீங்கள் செய்தவற்றின் பலனை முழு நாடும் இப்போது அனுபவிக்கிறது. நம்மை ஏமாற்ற முடியாது. எமது வழிமுறைகளைப் பின்பற்றியிருந்தால், இது நடந்திருக்காது. என அவர் மேலும் தெரிவித்தார்.