அஜித் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்

நேர்கொண்ட பார்வை,வலிமை  படங்களை அடுத்து மூன்றாவது முறையாக வினோத் உடன் இணைந்து தனது 61 ஆவது படத்தில் நடிக்க போகிறார் அஜித்குமார். வலிமை படம் திரைக்கு வந்தப் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். இதில் ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுவரை அஜித் படத்துக்கு  ஜிப்ரான்  இசையமைக்கவில்லை இதுவே முதல் படம். இந்த நிலையில் வலிமை படத்தை அடுத்து அஜித்தை வைத்து வினோத் இயக்கும் படத்துக்கு  ஜிப்ரான்  இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.