மலேசியாவில் அடுத்த மாதம் 19ம் திகதி பொதுத் தேர்தல்!

மலேசியாவில் அடுத்த மாதம் 19ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே நாளில் 3 மாகாணப் பேரவைகளுக்கான தேர்தலும் நடத்தப்படும்.மலேசியாவில் ஆளும் கூட்டணியின் இடைக்கால அரசிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், புதிதாக தேர்தல் நடத்தி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக பிரதமர் சாப்ரி யாகூப் கடந்த 10ம் திகதி அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கமைய தற்போது இந்த பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்களை நவம்பர் 5ம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். பொதுத் தேர்தலில் வாக்களிக்க 2.2 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.ஏற்கெனவே இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜீப் ரஷாக் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.