கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை : தாக்குதல்களை உக்கிரப்படுத்தவுள்ள பாதாள குழுக்கள் : புலனாய்வு தகவல்



பிரபல பாதாளகுழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்கும், போதைப்பொருள் வர்த்தகத்தை தனதாக்கிக் கொள்ளவும் சில தரப்புக்கள் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன.

பாதாள உலக தரப்பில் முதன்மையான நபராக கருதப்படும் கணேமுல்ல சஞ்சீவவினால் பல குற்றவாளிகள் துபாய் போன்ற நாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், இதன் காரணமாக அவரின் ஆதரவு தரப்பால் குறித்த  பழிவாங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

கம்பஹாவில் வைத்து கெஹல்பத்தர பத்மசிறியின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு கணேமுல்லே சஞ்சீவவால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொலை 'கம்பஹா பாஸ் போடா' என்ற முக்கிய கடத்தல்காரரின் உத்தரவின் பேரில் கணேமுல்லே சஞ்சீவவால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கம்பஹா உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் இருந்து திரும்பும்போது பாஸ் போடா சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது பின்னர் தெரியவந்தது.

மேலும், கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், கணேமுல்ல சஞ்சீவவின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளுக்கு தீவிரமாக பங்களித்த கமாண்டோ சலிந்தவை கணேமுல்ல  சஞ்சீவ துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இருப்பினும், செப்டம்பர் 2023 இல், போலி கடவுச்சட்டு மூலம் நேபாள பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் கணேமுல்ல சஞ்சீவ நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார். அன்றிலிருந்து, சஞ்சீவ துபாயில் இருந்து கட்டியெழுப்பிய பாதாள உலக சாம்ராஜ்யம் நொறுங்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

சஞ்சீவவால் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்ட பாதாள குழு உறுப்பினர்கள் ஐந்து கும்பல்களாகப் பிரிந்து ஒருவரையொருவர் எதிர்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், போதைப்பொருள் வலையமைப்பை சஞ்சீவ மட்டுமே நடத்திவந்துள்ளார்.

மேலும் அவரது சகாக்கள் இதனால் பயனடையவில்லை என்பது விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன்படி கமாண்டோ சலிந்தவும் சஞ்சீவவின் போட்டியாளர் எனவும், சஞ்சீவவைக் கொன்ற பிறகு, இது தொடர்பில் சமூக ஊடகங்களில் ஒரு கருத்து பகிரப்பட்டமையும் அறியமுடிகிறது.

புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ள தகவல்களின்படி, 'கணேமுல்ல சஞ்சீவ' கொலையின் மூளையாகச் செயல்பட்ட கெசல்பத்தர பத்மே என்பவர் திட்டமிடல்கள் அனைத்தையும் இத்தாலியில் இருந்து இயக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை ஹரக்கட்டாவின் நெருங்கிய தொடர்பாளர் ஒருவருடன் இத்தாலிக்குத் தப்பிச் சென்றதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

துபாய் உட்பட பல நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்த கெசல்பத்தர பத்மே தனது தந்தையின் கொலைக்குப் பழிவாங்க இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைக்குப் பிறகு, சஞ்சீவவின் குழுவைச் சேர்ந்தவர்கள் வரும் நாட்களில் கெசல்பத்தர பத்மேவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டி வருகின்றன.

கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்குப் பதிலாக, அவரது போதைப்பொருள் வர்த்தகத்தை வழிநடத்திய பாதாள உலக சக்தியைப் பிடிக்க இதுபோன்ற மோதல்கள் உருவாக்கப்படுகின்றன என்றும், பாதாள உலக எதிர்ப்புப்  தொடர்பான புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கின்றன.

இருப்பினும், கனேமுல்ல சஞ்சீவவின் உதவியுடன் போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி துபாய்க்குத் தப்பிச் சென்ற கரந்தெனிய ராஜு, பட்டா மஞ்சு, தினேஷ் வசந்தா மற்றும் கரந்தெனிய சுத்தா தலைமையிலான பிற குழுக்கள், எதிர்காலத்தில் தாக்குதல்களை தொடங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாட்டில் கொலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 23 பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், கனேமுல்ல சஞ்சீவவின் தலையீட்டால் மட்டுமே துபாய் மற்றும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் துபாய், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் மறைந்திருக்கும் பாதாள உலகக் கும்பல்களும் ஒரே நேரத்தில் தங்கள் சக்தியைக் காட்டத் தொடங்கும் என்று பாதுகாப்புப் படையினர் எச்சரித்துள்ளனர்.

கனேமுல்ல சஞ்சீவவுடன் இணைந்து பணியாற்றிய பின்னர், அவருடன் கெசல்பத்தர பத்மேவின் குழுவுடன் இணைந்த கமாண்டோ சாலிந்தா துபாய் கலனா உள்ளிட்ட குழுவும் இந்தக் கொலைத் திட்டத்தை ஆதரித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இந்தத் திட்டம் முழுவதும் கெசல்பத்தர பத்மேவால் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.