கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை

புதிய இணைப்பு

யாழ். நெல்லியடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சற்றுமுன்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி துண்டுப்பிரசுரம் விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் இன்று மாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.


முதலாம் இணைப்பு  

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை | Gajendrakumar Ponnambalam Arrested Today

யாழ்ப்பாணம் (Jaffna) - நெல்லியடி பகுதியில் இன்றையதினம் (24.10.2024) பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே நெல்லியடி காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பருத்தித்துறை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வேட்பாளர்கள் இருவரும் கட்சி ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டபோது குறித்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் நெல்லியடி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.