ரிஷி சுனக்குடன் கைகோர்த்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான் - முன்னெடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை


ஆட்களை கடத்தும் கும்பல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் உறுதி பூண்டுள்ளனர்.

பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட ரிஷி சுனக் உடனான முதல் தொலைபேசி உரையாடலில் இரு தலைவர்களும் குறித்த ஆட்கடத்தல் விவகாரம் தொடர்பில் விவாதித்துள்ளனர்.

ஆறு மாதங்களில் போதிய ஊழியர்களுடன் புதிய சிறந்த தொழில்நுட்பத்துடன் களமிறங்கவும் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 38,400 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர்.

வியாழக்கிழமை மட்டும் 308 பேர்கள் நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்த விவகாரம் தொடர்பில் தமது திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களில் போதிய ஊழியர்களுடன் புதிய சிறந்த தொழில்நுட்பத்துடன் களமிறங்கவும் ரிஷி சுனக் உறுதி அளித்துள்ளார்.

மட்டுமின்றி, உக்ரைன், காலநிலை மாற்றம், பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு வெறும் நான்கு சதவீத புகலிட கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக கடந்த வாரம் தெரியவந்தது.

ஆனால் இன்னும் 100,000 கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.