இராணுவ அதிகாரியின் மனிதாபிமான செயலால் நெகிழ்ச்சியடைந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியால் தவறவிடப்பட்ட கைப்பை இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

7 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயம் மற்றும் கமரா ஒன்று அடங்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் கைப்பை பொலன்னறுவை மாவட்டத்தின் கிரிதலேயில் தவறவிடப்பட்டுள்ளது.

குறித்த கைப்பை இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை (13) கிரிதலேயில் உள்ள அவுக்கண புத்தர் சிலை வளாகத்திற்கு அருகில் இந்தக் கைப்பையை இரண்டாவது இலங்கை இராணுவப் பொலிஸ் பிரிவின் (2 SLCMP)கோப்ரல் NEDPநாணயக்கார கண்டுபிடித்துள்ளார்.

2 SLCMP தலைமையகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், 7 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயம், ஒரு கனொன் கமரா, ரூபாய் 300,000, பெருவில் வசிப்பவரின் கடவுசீட்டு, ஒரு பவர் பேங்க் மற்றும் இரண்டு ஏ.டி.எம் கார்டுகள் கைப்பையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து தவறவிடப்பட்ட கைப்பை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கைப்பையின் உரிமையாளர் 2 SLCMP தலைமையகத்தில் இருந்து அனைத்து மதிப்புமிக்க பொருட்களையும் பெற்றுக்கொண்டுள்ளார்.