தமிழர் பகுதியில் 40000 போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

கிளிநொச்சி - முழங்காவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40,000 போதைப் பொருள் மாத்திரைகளை யாழ்ப்பாண போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

 யாழ்ப்பாண போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது போதைப்பொருட்களுடன் 5 சந்தேக நபர்களை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.