பாகிஸ்தான் சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து : நிறுத்தப்பட்ட விமான சேவைகள்

பாகிஸ்தானின் (Pakistan) லாகூரில் உள்ள அல்லமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (26) பெரும் தீ விபத்து ஏற்பட்டதால், அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இராணுவ விமானம் தரையிறங்கும் போது அதன் டயர் தீப்பிடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. 

ஓடுபாதை தற்காலிகமாக மூடல்

இந்த சம்பவத்தின் விளைவாக, ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மேலே தொடர்ந்து கரும்புகை எழும்பும் நிலையில், எந்தவொரு உயிரிழப்பு அல்லது சேதம் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.