சீனாவின் ஷாங்காயில் இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து-ஒருவர் பலி!

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு பெரிய இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை இந்த பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த தீயை அணைக்க ஷாங்காய் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு 500க்கும் மேற்பட்ட பணியாளர்களை அனுப்பி வைத்துள்ளனர்.தற்போது தீ கட்டுக்குள் வந்துள்ளதாகவும், எனினும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கொரோனா தொற்றை அடுத்து கடந்த இரண்டு மாதங்கள் நீடித்த கடுமையான முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து கடந்த வாரம் ஷாங்காய் விடுவிக்கப்பட்டது.