ஓரங்கட்டப்படும் ரொனால்டோ - பரபரப்போடு ஆரம்பமாகும் கால் இறுதிப் போட்டிகள் |


22வது பிபா(fifa) கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.சமகாலத்தின் கால்பந்தின் தலைசிறந்த வீரர்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவர்கள் மீதும் போர்த்துகல் மற்றும் ஆர்ஜண்டினா அணிகள் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதற்கேற்றபடியே, ரசிகர்களை ஏமாற்றாமல் போர்த்துகல், ஆர்ஜண்டினா, பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து, மொராக்கோ, குரோஷியா ஆகிய அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போர்த்துகல் அணி சுவிட்சர்லாந்தை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியின் முதல் பாதியில் ரொனால்டோ ஆடவில்லை. சமகாலத்தின் தலைசிறந்த வீரரான ரொனால்டோவை அந்த அணி நிர்வாகம் உதிரி வீரர்களோடு கதிரையில் அமரவைத்தது கால்பந்து உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிபா உலக கோப்பைகளில் முதல் முறையாக ரொனால்டோ களத்தில் இறக்கப்படாமல் கதிரையில் அமர்த்தப்பட்டுள்ளார். இது அந்த அணி நிர்வாகத்தின் மிகக்கடினமான முடிவு. ஆனால் அந்த முடிவு பலனளித்தது. ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ராமோஸ் என்ற வீரர் 3 கோல்களை அடித்து அசத்தினார்.

ராமோஸ் அபாரமாக ஆடியதால், மொராக்கோவிற்கு எதிரான காலிறுதி போட்டியிலும் ரொனால்டோ ஆடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தென்கொரியாவிற்கு எதிரான போட்டியில் ரொனால்டோ ஒரு சில தவறுகளை செய்ததாக கூறப்படுகின்றது.

ஆனால் போர்த்துகல் அணி மிகத்துணிச்சலாக ரொனால்டோவை உட்காரவைத்தது. அவருக்கு பதிலாக ஆடிய ராமோஸ் அபாரமாக ஆடி 3 கோல்களை அடிக்க, ரொனால்டோ அடுத்த போட்டியில் ஆடுவதும் சிக்கலாகியுள்ளது.போர்த்துகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸின் பேச்சும் அதையேதான் வெளிப்படுத்துவதாக கூறப்படுகின்றது. 

எதிர்பாராத பல முடிவுகளுடன் பரபரப்பை ஏற்படுத்திய குழு நிலை முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று நொக்-அவுட் போட்டிகளைத் தொடர்ந்து கத்தார் 2022 பீபா உலகக் கிண்ணப் போட்டியில் 8 அணிகள் மீதமுள்ள நிலையில் கால் இறுதிப் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமையும் (09) நாளை சனிக்கிழமையும் (10) நடைபெறவுள்ளன.

குறித்த போட்டிகளில் பிரேசில் குரேஷியாவையும், நெதர்லாந்து ஆர்ஜன்டீனாவையும், போர்த்துகல் மொரோக்கோவையும், இங்கிலாந்து பிரான்சையும் எதிர்த்தாடவுள்ளன.